திரை(மறைவு)ச் செய்திகள் ஒரு காதல் முறிந்தது!
`விசாலமாக' பரந்து விரிந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல், சமீபத்தில் முறிந்து போனது. காதலருக்கும், காதலிக்கும் இடையே `முக்கோண' வடிவில் சண்டை வந்து இருக்கிறது. இரண்டு பேரும் தங்கள் காதலுக்கு, `குட் பை' சொல்லிவிட்டார்கள்! `ரூட் கிளியர்!' கோவில்... கோவிலாக `ஷ்' நடிகை!
"ஷ்" நடிகைக்கு இரண்டும் பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று உள்ளுக்குள் அவர் ஏங்கி வந்தாராம். இந்த வேண்டுதலை நிறைவேற்றக்கோரி, கோவில்... கோவிலாக சென்று வருகிறார். சமீபத்தில் அவர் மனம் உருகி பக்தியுடன் வேண்டுதல் விடுத்த இடம், காளஹஸ்தி! மறுபடியும் அந்த ஆசை!
பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு போன அந்த "அழகான" நடிகைக்கு மீண்டும் பெரிய திரையில் கொடி பறக்கவிட வேண்டும் என்று ஆசை! அவருடைய பழைய நண்பர்களிடம் நேரடியாக சென்று வாய்ப்பு கேட்கவும் தயக்கம். அதனால், தனது சகோதரியை அனுப்பி, வாய்ப்பு கேட்கிறாராம்! சூப்பர் ஐடியா! உற்சாக விருந்து
குத்தகைதார நடிகை நட்சத்திர ஓட்டல் உற்சாக விருந்துகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். ஆடையிலும் படு தாராளம். சமீபகாலமாக அவரோடு ஒரு இளைஞரையும் பார்க்க முடிகிறது. இருவரும் தள்ளாடி கும்மாளம் போடுவதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. அந்த வாலிபர் பிரபல நடிகர் ஒருவரின் உறவினராம். அழகை கெடுத்த உடற்பயிற்சி
நயன நடிகை நெட்டை ஹீரோ படத்தில் சிக்ஸ்பேக் ரேஞ்சுக்கு கடும் உடற்பயிற்சி செய்ததால் அழகு போய் எழும்பும் தோலுமாய் மாறி இருக்கிறார். அன்னிய நாயகியும் இது போல் பயிற்சி செய்து பழைய அழகை தொலைத்து நிற்கிறார். இந்திப் படங்களில் இது போன்ற உடல்வாகுக்குதான் மவுசு என்பதால் அதை குறி வைத்து உருமாறி இருக்கிறார்கள். கவர்ச்சி போட்டி
நயனம் கவர்ச்சியில் செஞ்சுரி அடித்ததால் முதலிடத்துக்கு தாவியுள்ளார். அப்படிபோடு ஷாவுக்கு வயிற்றெரிச்சல். வில்லையும் தட்டிப்பறித்துக் கொண்டதால் கோபம். அவரை வீழ்த்த கவர்ச்சி ஆயுதத்தையே கையில் தூக்கியுள்ளார். சர்வமான படத்தில் நீச்சல் உடையில் தேகத்தை முழுசாக காட்டி கவர்ச்சி மழையே பொழிந்திருக்கிறாராம். படம் ரிலீசானதும் எதிராளி பக்கம் வீசும் காற்று தன் பக்கம் திரும்பும் என்று அடித்துச் சொல்கிறாராம். மோதல்
சிலம்பத்தில் இயக்குனருக்கும் நாயகருக்கும் மோதலாம். கேமரா ஆங்கிள் தெரியாமல் படம்பிடிப்பதாக டைரக்டர் மேல் பழி போட்டுள்ளனர். நிறைய காட்சிகளை நடிகரே படம் பிடிக்கிறாராம். நாயகனை காக்க வைத்து மாடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து தள்ளியதாக டைரக்டர் மீதும் குறை சொல்கிறார்கள். மறுத்த நடிகை
உலக நாயகர் சரித்திர பட வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார். நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது. படப்பிடிப்புக்கு வெளிநாடுபறக்கின்றனர். இதில் கனவு மின்சாரபடத்தில் அசத்திய இந்தி நடிகையை நடிக்க வைக்க அனுகினர். ஆனால் நடிகை மறுத்து விட்டாராம். புலம்பும் நடிகை
மெகா இயக்குனர் தயாரிக்கும் படத்துக்கு காலதாமதம் செய்து படப்பிடிப்பை குலைத்ததால் ஜாஸ் நடிகையை நீக்கி விட்டனர். காரணம் கேட்காமல் தூக்கியது அநியாயம் என சக நடிகைகளிடம் புலம்புகிறார் ஜாஸ். தனக்கு தைராய்டு வியாதி இருப்பதாகவும் காலை ஒன்பது மணிக்கு மேல் தான் படுக்கையை விட்டு எழ வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியதாலும் தாமதமாக படப்பிடிப்புக்கு போக நேரிட்டது. இதற்காக படத்தில் இருந்து கழற்றி விட்டது அநியாயம் என பல் கடிக்கிறார். நமீ'யும், ரூ.40 லட்சமும்..!
நமீ' நடித்து முடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அந்த மூன்று படங்களுக்குப்பின், அவர் கைவசம் புதிய படங்கள் எதுவும் இல்லை.அதற்கு காரணம், அவர் ஒரு படத்துக்கு ரூ.40 லட்சம் சம்பளம் கேட்பதுதான்! இந்த அதிக சம்பளத்தை கேட்டு, `நமீ' பக்கத்தில் போக பயப்படுகிறார்கள், பட அதிபர்கள்! ரூ.3 கோடி கேட்கிறார் "கடவுள்" நடிகர்
"கடவுள்" படத்தில் நடித்த அந்த மூன்றெழுத்து கதாநாயகன் தனது சம்பளத்தை ஒரேயடியாக, ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டார்! இந்த சம்பளம் நமக்கு கட்டுப்படியாகாது'' என்று சில பட அதிபர்கள் நடையை கட்டுகிறார்கள்! "சு" நடிகைக்கு சிபாரிசு செய்யும் "ந" நடிகர்
காதலில் விழுந்த `ந' நடிகர், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த `சு' நடிகைக்கு சிபாரிசு செய்கிறாராம். அவரிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், ``முதலில் `சு' நடிகையிடம் `கால்ஷீட்' வாங்குங்கள். அப்புறம் என்னிடம் வாங்க'' என்கிறாராம்! ``ஒரு படம் வருவதற்குள் இந்த ஆட்டமா?'' என்று முணுமுணுக்கிறார்கள், டைரக்டர்கள்! "நயன்"க்கு கொடுக்கப்பட்ட நஷ்ட ஈடு!
நயன் நடிகை ஒரு முடிவு எடுத்து விட்டால், அதில் உறுதியாக நிற்பவர். ``பையா படத்துக்காக மூன்று மாதங்கள் நான் காத்திருந்ததற்காக நஷ்ட ஈடு கொடுத்தால்தான் `அட்வான்ஸ்' தொகையை திருப்பி கொடுப்பேன்'' என்று கூறினார் அல்லவா?. அவர் சொன்னது போலவே `அட்வான்ஸ்' தொகை ரூ.20 லட்சத்தில், ரூ.5 லட்சத்தை நஷ்டஈடாக பிடித்துக்கொண்டு, ரூ.15 லட்சத்தை திருப்பிக் கொடுத்தாராம்! திரை(மறைவு)ச் செய்திகள் `நாயர்' நடிகையின் முடிவு!
`நாயர்' நடிகை கைவசம் புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று யோசித்து வருகிறார். மனதுக்கு பிடித்த மாப்பிள்ளையை அவரே தேடி வருகிறார்! திருமணத்துக்கு முன் ஜோடி. . .
`கீதமான` நடிகையும், கிரிஷ் பாடகரும் காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் அல்லவா? இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.அதற்கு முன்பே சென்னையில் நடைபெற்ற ஒரு சினிமா பட விழாவுக்கு இருவரும் ஜோடியாக வந்தார்கள். தம்பதிகள் போல் அருகருகே அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்கள். ``சினிமாவில் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா!'' என்றார், ஒரு மூத்த தயாரிப்பாளர்! இந்திக்கு போகிறார் "ராய்" நடிகை!
விளையாட்டு வீரருடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் `ராய்' நடிகை, விரைவில் ஒரு இந்தி படத்தில் நடிக்கப் போகிறார். `சின்' நடிகையை தொடர்ந்து இந்திக்கு செல்கிற தென்னிந்திய நடிகை இவர்தான்! "ராய்" நடிகையுடன் முதன்முதலாக ஜோடி போடப்போகும் நடிகர், சன்னிதியோல்! கல்யாணத்தில் இணையும் ஜோடி! "விஷ்" என்று உச்சத்துக்குப்போன மூன்றெழுத்து கதாநாயகனுக்கும், "நம்பர்-1" நீயா, நானா? என்ற போட்டியில் உள்ள மூன்றெழுத்து நடிகைக்கும் இடையே அரும்பிய காதல் கனிந்து, கல்யாணத்தில் முடியும் நிலையில் உள்ளது.இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் படம் திரைக்கு வந்ததும், திருமண பத்திரிகை கொடுக்க இருக்கிறார்களாம்! நடிகையின் காதல் விளையாட்டு!
இளம் டைரக்டர்களின் மனதில் காதல் ஆசையை தூண்டிவிட்டு, பிறகு ஏமாற்றி அவர்களை தாடி வளர்க்க வைத்து பார்த்து ரசிப்பதை, "மோ...கா" என்ற நடிகை பொழுதுபோக்காக வைத்து இருக்கிறார்.இவருடைய காதல் விளையாட்டில் சிக்கி, சின்னாபின்னமாகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதாம்! "சென்"னை தொட்டுப்பார்த்து கேலி-கிண்டல் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கும்பலாக வந்த சில ரசிகர்கள், `சென்'னை தொட்டுப்பார்த்து கேலி-கிண்டல் செய்தார்கள். `சென்' கோபப்படவில்லை. மாறாக அவர்கள் ஒவ்வொருவருடனும் கைகுலுக்கி, கையெழுத்தும் போட்டுக்கொடுத்தாராம்! தமிழ் ரசிகர்களின் மனதில் `செல்லமாக' குடியிருக்கும் அந்த `சென்' நடிகை. "தமன" நடிகையின் திடீர் மாற்றம்! "தமன" நடிகையை மும்பையில் இருந்து வரவழைத்து, தமிழ் பட அதிபர்களுக்கும், டைரக்டர்களுக்கும் அறிமுகப்படுத்தியவர், ஒருவர். அவர்தான் இதுநாள்வரை தமன நடிகையின் மானேஜராக இருந்தார்.திடீரென்று `தமன' நடிகை அந்த மானேஜரை மாற்றிவிட்டார். ஒரு பிரபல நடிகரின் மானேஜர் வசம் தன் `கால்ஷீட்' தேதிகளை ஒப்படைத்து இருக்கிறார். இந்த மாற்றத்துக்கு பின்னால் இருப்பவர் பற்றி மெல்ல புகைய ஆரம்பித்து இருக்கிறது! "பெல்" நடிகை தூது. . . . தமிழ் பட உலகில் முன்னணியில் உள்ள மூன்று இளம் கதாநாயகர்களுடன் வருகிற புது வருடத்தில் எப்படியாவது ஜோடி சேர்ந்து விடவேண்டும் என்று `மாஸ்டர் பிளான்' போட்டு இருக்கிறார், பிரியமான `பெல்' நடிகை. இதற்காக இப்போதே காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார்.முதல்கட்டமாக அந்த மூன்று கதாநாயகர்களிடமும் தனது மானேஜரை தூது அனுப்பி, பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்.
©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper send your comments and corrections |