"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இந்தியச் செய்திகள்


2010, மே மாதம்


மும்பை தாக்குதல் வழக்கில்
பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா?
நாளை தீர்ப்பு


  • டிசம்பர்


    இன்றைய(11-12-2009) இந்தியச் செய்திகள் -செய்திப் புகைப்படங்கள்


  • இன்றைய(10-12-2009) செய்திப் புகைப்படங்கள்


  • இந்தியச் செய்திகள்


    செப்டம்பர்


    இன்றைய(28-09-2009) செய்திப் புகைப்படங்கள்


  • இன்றைய(27-09-2009) செய்திப் புகைப்படங்கள்


  • மார்ச்.25-


    "அத்வானி ஒரு சந்தர்ப்பவாதி" மன்மோகன் சிங் கடும் தாக்கு


    எந்த விதத்திலும் அத்வானிக்கு மன்மோகன் சிங் இணையாக மாட்டார்!. பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா ஆவேச பதில்


    பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் 15-ந் தேதி வெளியிடப்படும் வெங்கையநாயுடு அறிவிப்பு!.




    சென்னை, மார்ச்.2-2009

    பா.ஜ.க. பாராளுமன்ற வேட்பாளர் பட்டியல் 15-ந் தேதி வெளியிடப்படும் என்று வெங்கையநாயுடு தெரிவித்தார்.

    பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்த வந்த அகில இந்திய தேர்தல் பொறுப்பாளர் எம்.வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளோம். அத்வானி வருகிற 7-ந்தேதி நாகர்கோவில் வருகிறார். இந்தியா முழுவதும் வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு, மற்றும் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து குண்டு வெடிக்கிறது. திருப்தி இல்லாத நிலைதான் நிலவுகிறது.

    இதனால் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிதான் ஆட்சிக்குவரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த எண்ணம் வடமாநிலங்களிலும் மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய தென்மாநிலங்களிலும் அதிகம் ஓங்கி நிற்கிறது.

    இதுவரை இந்திய அளவில் 138 வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டோம். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் 5-ந்தேதி கூடுகிறது. அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பா.ஜ.க. தங்கள் அறிக்கைளை சமர்ப்பிக்க வேண்டும். அந்த கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்பட்டு 15-ந் தேதி வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்படும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. பழைய உறவு பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் 296 இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் கூட்டணி பற்றி இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்ல ஆளுமை, பாதுகாப்பு, அனைத்து துறையிலும் வளர்ச்சி மேம்பாடு ஆகியவை சிறப்பாக இருக்கும் என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்வோம். இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிலை மோசமாக உள்ளது. பாதுகாப்பு இன்றி உணவு இன்றி வாடுகிறார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டது. உடனே இலங்கை ராணுவம் தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மக்களின் பாதுகாப்புக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இந்த பிரச்சினையும் பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்.

    இவ்வாறு வெங்கையநாயுடு தெரிவித்தார்.

    பேட்டியின்போது பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., புதுச்சேரி மாநில பா.ஜ.க.தலைவர் விசுவேசுவரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


    இந்தியச் செய்திகள்


    ஸ்லம்டாக் மில்லினரில் நடித்த குழந்தை நட்சத்திரத்துக்கு அடி தந்தையின் கோபம்




    மும்பை,மார்ச்.1-2009

    களைப்பு காரணமாக பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த, `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த சிறுவனை அவனது தந்தை அடித்தார்.

    ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்த `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் கதாநாயகனின் குழந்தை பருவ வேடத்தில் அசாருதீன் முகமது என்ற சிறுவன் நடித்தான். மும்பையில் பாந்தாரா அருகே உள்ள குடிசை பகுதியில் அவன் வசிக்கிறான். ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்று விட்டு, கடந்த வியாழக்கிழமை அன்று இந்தியா திரும்பினான்.

    உலகமே அவனை கொண்டாடியதை பார்த்த அவனது தந்தை முகமது இஸ்மாயில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேளதாள வரவேற்புடன் தனது வீட்டுக்கு திரும்பிய அசாருதீனை அனைவரிடமும் காண்பித்து பெருமிதம் கொள்ள முகமது இஸ்மாயில் நினைத்தார். அதற்காக, சில பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்களை தனது குடிசைக்கு நேற்று முன்தினம் அழைத்திருந்தார்.

    அவர்கள் அனைவரும் வந்ததும் அசாருதீனை வெளியே வருமாறு கூறினார். ஆனால் களைப்பாக இருப்பதாகவும், தலை வலிப்பதாகவும் அவன் தெரிவித்து விட்டான். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அசாருதீனுடைய தந்தை அவனது கன்னத்தில் `பளார்' என அறைந்தார். வலி தாங்காமல் சிறுவன் அசாருதீன் தேம்பி தேம்பி அழத் தொடங்கினான்.

    உடனே அசாருதீனின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தலையிட்டு இஸ்மாயிலை தடுத்தனர். அசாருதீனின் தந்தை ஒரு காசநோயாளி என்பதும், அவனது தாயாருக்கு ஒரு கண் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த களேபரம் அனைத்தும் 5 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது. எனினும், மகனை அடித்ததற்காக சில மணி நேரம் கழித்து இஸ்மாயில் வருத்தம் தெரிவித்தார்.

    உலகமே கொண்டாடி வரவேற்ற போதிலும், தந்தையின் அதிரடி கோபத்துக்கு ஆளான சிறுவன் அசாருதீனின் நிலைமை பரிதாப படும்படி இருந்தது.


    பாராளுமன்ற தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் தேர்தல் கமிஷன் தீவிரம்




    புதுடெல்லி,பிப்ரவரி 28, 2009

    பாராளுமன்ற தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மன்மோகன்சிங் அரசின் பதவி காலம் மே மாதம் 21-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய அரசு தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.

    எனவே பாராளுமன்றதேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சித்தலைவர்கள், உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் கமிஷன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி முடித்து விட்டது.

    பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது தேர்தல் தேதியை அறிவிக்க இயலாது என்பதால் தேர்தல் கமிஷன் காத்து இருந்தது. பாராளுமன்ற கூட்டம் நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டதால் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான நடவடிக்கையில் தலைமை தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்தியச் செய்திகள்


    தேர்தலுக்கு முந்தைய பாராளுமன்றத்தின் கடைசி கூட்டம் முடிந்தது




    புதுடெல்லி,பிப்ரவரி 27, 2009

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய 14-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டம் நேற்றுடன் முடிந்தது. டெல்லி மேல்-சபையும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது அமைந்துள்ள 14-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம், கடந்த 2004-ம் ஆண்டு மே 17-ந் தேதி கூடியது. 5 ஆண்டுகள் முடிந்து விட்டதால் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டம் நேற்று முடிந்தது. பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, 15-வது பாராளுமன்றம் கூடும்.

    எனவே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று அறிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் 332 முறை பாராளுமன்றம் கூட்டம் நடைபெற்றது. 15 கூட்டத் தொடர்களில், இதுவரை இல்லாத அளவுக்கு 258 சட்ட மசோதாக்கள் நிறைவேறின. மொத்தம் ஆயிரத்து 738 மணி நேரம் 45 நிமிடங்கள் பாராளுமன்ற அலுவல்கள் நடந்தன. எம்.பி.க்கள் அமளியால் 423 மணி நேரம் வீணாகியது.

    கடைசி நாளான நேற்று, பெருமளவில் இருக்கைகள் காலியாக கிடந்தன. ஏராளமான எம்.பி.க்களும், பல மத்திய மந்திரிகளும் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. சில சமயங்களில் மந்திரிகள் மட்டுமே அவையில் இருந்தனர். அதே நேரத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டிய மந்திரிகளில் சிலர் அவையில் இல்லை.

    கடைசி நாள் என்பதால் முக்கிய தலைவர்கள் சிலர் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசும்போது, `வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறிவித்துள்ளார். எனவே, அவருக்கு கடைசி பாராளுமன்ற கூட்டம் என்பதால் மிகவும் உருக்கமாக பேசினார்.

    டெல்லி மேல்-சபையும் நேற்று காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தை போல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இல்லாமல் நிரந்தர அமைப்பாக மேல்-சபை இருக்கிறது. தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, மேல்-சபையின் 115-வது கூட்டத் தொடர் ஆகும்.


    இந்தியச் செய்திகள்


    ஐகோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை




    புதுடெல்லி,பிப்ரவரி 24, 2009

    வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் கடந்த 19ம் தேதி சென்னை ஐகோர்ட் டில் நடந்த மோதல் பற்றி ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழுவின் தலைமையில் நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கை மனு மீதான விசார ணை நாளை நடக்கும். அதே நாளில் வக்கீல்கள் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என அறிவிக்க கோரிய வேறொரு வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்படும்.கடந்த 19ம் தேதி சென்னை ஐ கோர்ட்டில் நடந்த வக்கீல்- போலீஸ் மோதலால் தன்னுடைய வழக்குகளை வாதாட முடியவில்லை என கூறி முரளீதரன் என்னும் வக்கீல் சுப்ரீம் கேர்ட்டில் மனு செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தலைமையில் 27ம் தேதி நடக்கவிருந்த வழக்கு விசாரணை, முன்கூட்டியே நாளை நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டது.சென்னை ஐகோர்ட்டில் கடந்த 19ம் தேதி மோதல் சம்பவத்திற்கு நீதி விசாரணை தேவை என்று பெண் வக்கீல் வைகை தலைமையிலான குழு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனைச் சந்தித்தது

    அன்று போலீசார் நடத்திய தாக்குதல் , அத்துமீறல் ஆகியவற்றை நேரடியாக விளக்கி, மனுவும் தரப்பட்டது. "சிடி' யும் தரப்பட்டது. தலைமை நீதிபதியிடம் இக்குழுவினர் விளக்கிய போது , சென்னைக்கு நேரடியாக வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நீதிபதி சதாசிவமும் உடனிருந்தார். ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய குழு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற இவர்கள் கோரிக்கை அடங்கிய மனு மீதான விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

    இது பற்றி வக்கீல் வைகை கூறுகையில்," நடந்தவற்றை தலைமை நீதிபதியிடம் விளக்கினோம். எங்களது மனுவை வழக்கமான மனு என்ற முறையில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார் தலைமை நீதிபதி. கடந்த 18ம் தேதி வரைதான் எங்கள் போராட்டம் நடந்தது.

    19ம் தேதி வழக்கம் போல் கோர்ட் செயல் பட்டது. மாலை 3.30 மணிக்கு பின் 400 போலீசார் கோர்ட்டுக்குள் நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தினர், ஆனால் மீடியாக்கள் தகவலை திரித்து வெளியிட்டன' என்றார்.


    இந்தியச் செய்திகள்


    இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்




    புதுடெல்லி,பிப்ரவரி 22, 2009

    இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், எனவே ராணுவமும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

    இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்றாலும் இலங்கையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், கொழும்பு நகரில் நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கையில் போர் நீடித்து வருவது குறித்து கவலை தெரிவித்து உள்ள இந்தியா, இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணவேண்டும் என்றும் ராணுவமும் விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என்றும் மீண்டும் வற்புறுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து, மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்கஞ்ச் என்ற இடத்தில் வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது. இது கவலை அளிக்கும் விஷயமாகும். விடுதலைப்புலிகளின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காணவேண்டும். ராணுவ நடவடிக்கையால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

    இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றே வழியாகும். இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவேண்டும்.

    முதலில், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஏற்ற சுமூகமான அமைதிச் சூழல் அங்கே உருவாக்கப்படவேண்டும். அப்படியொரு சூழல் உருவாகாதவரை எதிர்காலத்தில் தாக்குதல், பதில் தாக்குதல் என்ற நிலை அங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    இலங்கை பிரச்சினையை பொறுத்தமட்டில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. போர் முனைப் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறோம். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களது இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது.

    மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கும், மறைந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே 1987-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் அமல்படுத்தப்படவேண்டும்.

    அந்த ஒப்பந்தத்தத்தின் படி அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சட்டரீதியிலான உரிமைகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இலங்கையின் பிராந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதகம் இல்லாத வகையில் அந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு இவை நிறைவேற்றப்படவேண்டும்.

    அதிகார பகிர்வின் மூலம்தான் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று இந்தியா கருதுகிறது. பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டால்தான் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும்.

    மேற்கண்டவாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


    இந்தியச் செய்திகள்


    சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் குற்றவாளி தண்டனை 24-ந் தேதி அறிவிப்பு




    புதுடெல்லி,பிப்ரவரி 21, 2009

    மத்திய அரசில் பி.வி.நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது, தகவல் தொடர்புத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்தவர் சுக்ராம். இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு 82 வயது ஆகிறது.

    சுக்ராம் தனது பதவி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.5 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வி.கே.மகேஸ்வரி முன்னிலையில் நடந்து வந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    பல்வேறு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் குற்றவாளி என்றும், அவர் ரூ.4 கோடியே 25 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்தது நிரூபணமாகி இருப்பதாகவும் நீதிபதி மகேஸ்வரி தீர்ப்பு கூறினார். அவருக்கான தண்டனை விவரம் 24-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி மகேஸ்வரி தீர்ப்பளித்தார். அதிகபட்சமாக அவருக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.


    இந்தியச் செய்திகள்


    காங்கிரசில் அசாருதீன்



    புதுடெல்லி,பிப்ரவரி 20, 2009

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தீவிர அரசியலில் குதிப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்தார். அதற்கு சோனியா அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து, ஆஜ்மீர் தர்காவுக்கு தனது மனைவி சங்கீதா பிஜ்லானியுடன் நேற்று முன்தினம் சென்று தொழுகை நடத்தினார்

    இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் நேற்று முறைப்படி சேர்ந்தார். இந்த தகவலை, காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளரான வீரப்ப மொய்லி தெரிவித்தார். இது குறித்து பேட்டியளித்தபோது, அசாருதீனும் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் டி.ஸ்ரீனிவாசும் உடன் இருந்தனர்.

    வீரப்பமொய்லி கூறும்போது, "20 நாட்களுக்கு முன் காங்கிரசில் சேருவது குறித்து அசாருதீன் விருப்பம் தெரிவித்தார். அதற்கு சோனியா சம்மதத் தெரிவித்ததை தொடர்ந்து முறைப்படி கட்சியில் சேர்ந்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரும் எந்த நிபந்தனையுடனும் கட்சியில் சேரவில்லை'' என்றார்.

    எனினும், அசாருதீன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் ஐதராபாத் நகரில் உள்ள மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் சேர்ந்தது குறித்து அசாருதீன் கூறுகையில், "சுதந்திர போராட்டத்திலும், நவீன இந்தியாவை உருவாக்குவதிலும் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏராளமான தியாகங்கள் செய்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. எனவே காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டு நலனுக்காகவும் உழைப்பதற்காகவே கட்சியில் இணைந்துள்ளேன். தற்போது நான் கேப்டன் அல்ல. ஒரு வீரர் தான். எனவே, தேர்தல் களத்தில் கட்சி இறக்கினால், நான் விளையாடுவேன்'' என்றார்.

    இந்திய அணியில் நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்த அசாருதீன், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

    அசாருதீன் காங்கிரசில் சேர்ந்தது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், "நாட்டில் உள்ள அனைத்து சூதாடிகளும் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்கள் அல்லது சமாஜ்வாடி கட்சியில் சேருகிறார்கள்'' என்றார்.


    மார்ச்.3- வரையிலான செய்திகள்



    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission
    DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
    send your comments and corrections